ரணிலைப்போன்று எதிர்காலத்தில் பலருக்கு ஏற்படப்போகும் கதி :உறுதிபட கூறும் அநுர தரப்பு
Dr Rajitha Senaratne
Ranil Wickremesinghe
NPP Government
By Sumithiran
சட்டத்தின் பார்வையில் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) வெறும் ஒரு நபர்தான் என்றும், எதிர்காலத்தில் இன்னும் பலர் இதேபோன்ற கதியை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு இதுபோன்ற ஒன்று நடந்திருந்தால், அவருக்கு என்ன நடந்திருக்கும் என்று பலர் யோசித்திருப்பார்கள்.
ராஜித சேனாரத்ன கூட எப்படி உணருவார்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) கூட இப்போது இது தொடர்பில் எப்படி உணருகிறார் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரணிலுக்காக ஒன்றுபட்டவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள்
மேலும் கருத்து தெரிவித்த துணை அமைச்சர், 'ரணில் ஒரு திருடன்' என்று கூச்சலிட்ட குழுக்கள் இப்போது ஒன்றுபட்டுள்ளன என்றும், அந்தக் குழுக்கள் மீதும் பல்வேறு அளவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி