முன்னாள் ஜனாதிபதி குறித்து சிஐடியின் 4ஆம் மாடி விசாரணை! சர்ச்சையை கிளப்பிய தகவல்
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நான்காவது மாடிக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இருப்பினும் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
பௌத்த துறவி ஒருவரின் பெயரிலான போலிச் சமூக வலைத்தளக் கணக்கொன்றில் இருந்து முதன்முதலாக இந்த தகவல் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு தரப்பினர்
இதையடுத்து குறித்த தகவல் தற்பொழுது பல்வேறு தரப்பினராலும் பரப்பப்பட்டு வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்தப் பதிவில் எந்தவொரு நம்பகமான ஆதாரமோ அல்லது அதிகாரப்பூர்வ விபரங்களோ உள்ளடக்கப்படவில்லை.

விசாரிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி யார்? அல்லது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எவை? என்பது பற்றிய எந்தவொரு குறிப்பிட்ட தகவலும் அந்தப் பதிவில் குறிப்பிடப்படவில்லை.
எனவே உத்தியோகபூர்வ அறிவிப்புகள் ஏதுமின்றி சமூக வலைத்தளங்களில் பரவும் இவ்வாறான வதந்திகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |