இலங்கையர்களின் DNAயில் பிரித்தானியாவில் பரவிய வைரஸின் புதிய விகாரம் கண்டுபிடிப்பு
Sri Lanka
People
Corona Virus
By Vasanth
இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் எடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸின் புதிய திரிபு (பி .1.1.7) இருப்பதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, அவிசாவளை, வவுனியா, பியகம, வத்தளை, மத்துகம, பிங்கிரிய மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தோரில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
ஜனவரி நடுப்பகுதியிலிருந்து பெப்ரவரி வரை எடுக்கப்பட்ட 92 உயிரியல் மாதிரிகள் டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
புதிய வைரஸ் மற்ற வைரஸை விட குறைந்தது 50% வேகமாக பரவுகிறது என்று அவர் கூறினார்.