பிஸ்கட் சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பு : வெளியானது காரணம்
பிஸ்கட் சாப்பிட்டு யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11ஆம் திகதியன்று நியுயோர்க்கில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த ஒர்லா பாக்செண்டேல் என்பவரே பிஸ்கட் சாப்பிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உடல் முழுவதும் ஒவ்வாமை
25 வயது நிறைந்த இவர் ஒரு தொழில்முறை நடனக்கலைஞராக இருந்துள்ளார், தனது வேலையின் நிமித்தம் நியுயோர்க்கில் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று பாக்செண்டேல், வெண்ணிலா புளோரன்டைன் எனப்படும் பிஸ்கெட்டை சாப்பிட்டுள்ளார்.
இதன் போது சிறிது நேரத்திலேயே அவரது உடல் முழுவதும் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் பாக்செண்டேல் உயிரிழந்தார்.
பிஸ்கெட்டின் மேலுறையில்
இவரது மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் சாப்பிட்ட பிஸ்கெட்டில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், பிஸ்கெட்டின் மேலுறையில் சேர்மானங்களில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டது குறிப்பிடப்படாமல் இருந்ததும், அது தெரியாமல் பாக்செண்டேல் அதனை வாங்கி உட்கொண்டு இறந்ததும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |