விநாயக உருவ தங்கக்கட்டிகளை உருவாக்கிய பிரித்தானிய நிறுவனம்..!
London
United Kingdom
Festival
Hinduism
By pavan
பிரித்தானியாவில் ‘ரோயல் மின்ட்’ நிறுவனம் விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டிகளை தயாரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டே குறித்த நிறுவனம் இவ்வாறான தங்க கட்டிகளை உருவாக்கியுள்ளது.
24 கரட் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தங்க கட்டியின் எடை 20 கிராம் எனவும் இதன் விலை ஒரு லட்சத்து 6543 ரூபாய் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகாலட்சுமி உருவ தங்கக் கட்டிகள்
இந்நிலையில், ஐரோப்பாவில் பிரித்தானியா அரண்மனையைச் சேர்ந்த ரோயல் மின்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடனான தங்கக் கட்டிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
