பிரித்தானியாவில் இரு நாட்களுக்கு முடங்கப் போகும் புகையிரத சேவை..!
பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி 20 ஆயிரம் புகையிரத சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் ரஷ்யப் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன.
மேலும், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதால் பிரித்தானியாவில் அதன் பாதிப்பு அதிகமானது.
20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள்
இதனால் பிரித்தானியாவில் புகையிரத சேவை, விமான நிலையம், தபால் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி அவ்வப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசாங்கத்துக்கு பெரும் அழுத்தமாக உள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி மற்றும் அடுத்த மாதம் 2 ஆம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள சுமார் 20 ஆயிரம் புகையிரத சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.