கஜேந்திரகுமார் கைது விவகாரம் - பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்
Gajendrakumar Ponnambalam
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கின்றேன்.
அட்டூழியங்கள் இனப்படுகொலைகளுக்கான நீதி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துக் குரல் கொடுக்கும் தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை இந்த கைது அச்சம் தரும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
கண்டனம்

அத்துடன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளதை தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மெக்டொனாக்கும் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி