தென்னாபிரிக்காவில் கடத்தப்பட்ட பிரிட்டன் விமானி
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விமான நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் விமானி ஒரு குழுவினரால் கடத்தப்பட்டதை அடுத்து, தரையிறங்கிய விமானத்தை மீண்டும் செலுத்துவதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் மாற்று விமானி ஒருவரை அனுப்ப வேண்டியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள செக்கர்ஸ் புளூபேர்ட் மெல்ரோஸ் மால் முன் பொருட்களைள கொள்வனவு செய்து கொண்டிருந்த விமானியே கடத்தப்பட்டார்.
கடத்தல் நாடகத்தை அரங்கேற்றிய பெண்
விமானி மாலில் இருந்து வெளியேறும் போது, ஒரு பெண் அருகில் வந்து தனது பொருட்களை காருக்கு எடுத்துச் செல்ல உதவி கேட்டார். விமானி லக்கேஜுடன் அந்தப் பெண்ணின் காருக்குச் சென்றார், அங்கு காரில் வந்த ஒரு குழு விமானியைக் கடத்திச் சென்றது.
பணம் பெறுவதற்காக வெறிச்சோடிய பகுதியில் காரை நிறுத்தி விமானியை பத்து முறை சித்ரவதை செய்ததாக ஜோகன்னஸ்பர்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிர்ச்சியில் விமானி
பணத்தை செலுத்திய பின் விமானி விடுவிக்கப்பட்டார்.ஆனால் விமானி இந்த சம்பவத்தை அடுத்து அதிர்ச்சி அடைந்தவராக காணப்பட்டார் இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறப்பதற்காக மாற்று விமானியை அனுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |