பிரித்தானியாவிற்கு படிக்க சென்ற மாணவன் சடலமாக மீட்பு!
India
Death
England
By pavan
பிரித்தானியாவில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவன் நதியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படிப்புக்காக பிரித்தானியா சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் சென்ற இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் கடந்த (17.11.2023)ஆம் திகதி நடைப் பயிற்சிக்கு சென்றபோது அவர் வீடு திரும்பாததால் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதன்போது தேம்ஸ் நதியில் ஒதுங்கிய அவரது உடலை மீட்ட காவல்துறையினர் நடைபயிற்சிக்கு சென்றபோது அவர் நதியில் தவறி விழுந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி