சிறிலங்கா இராணுவத்தின் நலன்புரி விற்பனை நிலையத்தில் கொள்ளை
கிரித்தலேயில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ காவல்துறை சேவைப் படை முகாமுக்குச் சொந்தமான நலன்புரி கடை உடைக்கப்பட்டு சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் திருடப்பட்டுள்ளதாக மின்னேரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்பக்க ஜன்னலை உடைத்து இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ காவல்துறையின் அறிவித்தலுக்கு அமைய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிகரெட்டுகள் திருட்டு
இந்த திருட்டு நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக இராணுவ காவல்துறையினர் மின்னேரிய காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாமில் இயங்கி வரும் இந்த பொதுநலக் கடைக்கு அருகில் வெளியாட்கள் இருப்பதற்கு அனுமதி இல்லை, சிகரெட் எங்கு வைக்கப்படுகிறது என்பதை நன்கு அறிந்தவரே இந்த திருட்டைச் செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
