பிரபல நடிகை நடத்திய விபசார விடுதி -நான்கு பெண்கள் உட்பட எழுவர் சிக்கினர்
பிரபல நடிகை ஒருவரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கண்டி மாபானாவத்துறையில் வீடொன்றில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை காவல்துறையினர் நேற்றையதினம் சுற்றிவளைத்ததில் நான்கு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக கண்டி குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மின்சாரக் கட்டணத்தில்

மின்சாரக் கட்டணத்தில் நுகர்வோரின் பெயர் நடிகையின் பெயரைப் போலவே இருப்பதாகவும் ஆனால் அவர் வீட்டின் உரிமையாளரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மின்பட்டியலை முன்னிலைப்படுத்தவும், நீதிமன்ற உத்தரவைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்கட்டணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபரை நேரில் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சரணடைய உத்தரவு

தலைமறைவான விபசார விடுதியின் மேலாளருக்கு காவல்துறையில் சரணடையுமாறும், வீட்டின் வாடகை அல்லது குத்தகை தொடர்பான ஒப்பந்தத்தை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.