மின்னல் தாக்கி பரிதாபகரமாக பலியான சகோதரர்கள்
கோனகனார மஹாவெல்ய பகுதியில் மழையில் இருந்து தப்பிக்க கொட்டகைக்கு ஓடிய சகோதரர்கள் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக கோனகனார காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தல முகவரியில் வசிக்கும் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த சிதாரா மதுவந்த (34) மற்றும் டபிள்யூ. எம். சமிந்த பண்டார (32) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
பருத்தி வெட்டியவேளை திடீரென பெய்த மழை
இந்த இரு இளைஞர்கள் மற்றும் பலர் மஹாவெல்ய கால்வாயில் இயந்திரம் மூலம் பருத்தி வெட்டிக் கொண்டிருந்த போது, மழை பெய்ததும் வயல்வெளியில் கட்டப்பட்டிருந்த கொட்டகைக்கு ஓடிச்சென்றனர். எனினும் ஏனையவர்கள் வயலை விட்டு வெளியேறினர்.
சிறிது நேரத்தில் மின்னல் தாக்கியதுடன், சில நிமிடங்களின் பின்னர், நெல் வயலிலுள்ள கொட்டகை தீப்பற்றி எரிவதைக் கண்ட உயிரிழந்த இளைஞர்களின் தாயாரான சமிந்த பண்டார சம்பவ இடத்திற்கு வந்தார்.
மின்னல் தாக்கி பற்றி எரிந்த கொட்டகை
மின்னல் தாக்கத்தினால் கொட்டகை தீப்பற்றியதால், சமிந்த பண்டாரவின் தலையிலும் தீப்பிடித்து அவரது கைகால்கள் எரிந்துள்ளன. மற்றைய இளைஞன் தூக்கி வீசப்பட்டு விழுந்ததுடன், அவரது காற்சட்டையில் இருந்த கைத்தொலைபேசியும் மின்னல் தாக்கி நாசமானது.
