பௌத்தத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் - சஜித் பிரேமதாச
பௌத்தத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
இன்று (10 காலியில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்புத்த சாசனம் பின்னடைவு
அவர் மேலும் தெரிவிக்கையில், சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும். இதற்காக புத்தசாசன அமைச்சு, பௌத்த நிதியம் மற்றும் பல சாசன ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட எமது நாட்டில், பல்வேறு காரணிகளால் தற்போது சம்புத்த சாசனம் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.
இந்த உன்னதமான சாசனத்தைப் பாதுகாப்பது அனைத்து பக்தர்களினதும் புரோகிதர்களினதும் பொறுப்பாகும்.
மதமும் ஆட்சியும் ஒன்றாகக் கலக்கக் கூடாது. பௌத்தத்தை ஒரு அரசியல் ஆயுதமாக்குவதில், மதம் பெற வேண்டிய உயர்வான அந்தஸ்து குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுத்தப்படுகிறது.
சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பது வெறும் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படமால் நடைமுறைச் செயல்களால் அமைய வேண்டும்.
மகா சங்கரத்தினரின் பாதுகாப்பு
நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் பல்வேறு தியாகங்களைச் செய்வது, கடினமானதொரு பயணத்தில் ஈடுபட்டுவரும் சம்புத்த சாசனத்தின் காவலர்களாக கருதப்படும் மரியாதைக்குரிய மகா சங்கரத்தினரைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். அதை நடைமுறை யதார்த்தமாக்குவதற்கு அனைவரும் ஒன்றித்து சமமாக பங்களிக்க வேண்டும்.
புத்தபெருமான் போதித்த தசராஜ தர்மத்தின் பிரகாரம் அரசாட்சி நடத்தப்பட்டால் நாடும், இனமும், மதமும், சம்புத்த சாசனமும் பாதுகாக்கப்படும், அந்த இலக்கை அடைவதற்கு செயற்படுவது அனைவரின் பொறுப்பாகும். தற்போது பொய் கோலோட்சி உண்மை மூடிமறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
