கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பௌத்த பிக்கு...! அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்
மடாலயம் ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (25) பிற்பகல் எப்பாவல (Eppawala) காவல்துறை பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது
கொலை செய்யப்பட்ட பிக்கு 69 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதி பற்றிய தகவல்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பிக்குவை சந்திப்பதற்காக வந்த நபரொருவரும் மற்றும் வேறொரு விகாரையைச் சேர்ந்த பிக்குவும் இந்தக் கொலையைக் கண்டு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பிக்குவிற்கு முச்சக்கர வண்டி மற்றும் சாரதி ஒருவர் இருப்பதும் தெரியவந்த நிலையில், குறித்த சாரதி தற்போது மடாலயத்தில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டி சாரதி பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், கொலையை யார் செய்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.
மேலும், நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்பாவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
