ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த தேரர் யாழில் இருந்து நடைபயணம் (படங்கள்)
வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு நடை பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.
நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டியே இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தெய்வேந்திர முனை வரை பயணம்

தனது தூரநோக்கமான செயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர்,
நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் இன, மத, பேதம் இன்றி ஒற்றுமையாகவும் நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து இன்று காலை நயினா தீவு ஸ்ரீ நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு ஆரியகுளம் நாக விகாரையில் இருந்து இலங்கையில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று தெய்வேந்திர முனையில் தனது நடை பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
