ரணிலின் பாதீட்டால் நெருக்கடி மேலும் மோசமடையும் - உதய கம்மன்பில
உலகின் மிகப்பெரிய அரசாங்கத்தை இலங்கை கொண்டிருப்பதாகவும் இதுவே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணம் எனவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான மொத்தக் கடன் தொகை குறித்து அதிபர் தகவல் வெளியிடாத போதிலும் சுமார் 5 ட்ரில்லியன் ரூபாய் கடனை இலங்கை தனது கடன் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டுமென உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நெருக்கடி மேலும் மோசமடையும்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் படி 11 அரச நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன. இது ஒரு அநாவசியமான செலவு.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களை கொண்டு தமது சேவைகளை செய்ய வேண்டும். புதிய நிறுவனங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் முயற்சிக்க கூடாது.
அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவு திட்டம் கடன் சுமையை அதிகரித்து நாட்டின் நெருக்கடி நிலையை மேலும் மோசமடைய செய்யும்.
இலங்கையின் கடன்கள்
இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை மீண்டும் செலுத்துவது குறித்து வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்தக் கடன்களுக்கான வட்டிகள் குறித்து மாத்திரம் பேசப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றுவதற்காக தான் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
நாட்டின் மொத்தக் கடன்கள் குறித்த உண்மையை தற்போதைய அரசாங்கம் மறைக்கிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்