வரவு - செலவுத் திட்டம் குறித்து முடிவெடுக்காத மொட்டு
இலங்கையின் வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை என மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''வரவு செலவு தொடர்பான உறுதியான முடிவை கட்சியே எடுக்கும்.
தேர்தல் சவால்
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் வாக்குக் கேட்டு நாடாளுமன்றம் தெரிவாகி, பின்னர் சுயாதீனமானவர்களே கட்சி மீது கல்லெறிகின்றனர். இது பற்றி நாம் பதற்றம் அடையவில்லை.
அந்தக் கற்களை வைத்து பாதை அமைத்து பயணிப்போம். எமது பயணம் மெதுவானதாக இருக்கலாம். ஆனால், இலக்கு நோக்கியது.
தற்போது கல்லெறிபவர்கள் அப்போது பார்வையாளர்களாக மாறுவார்கள். அவர்களுக்குப் பெரிய சவால் அல்ல, சிறியதொரு சவாலை விடுக்கின்றேன், முடிந்தால் அடுத்துவரும் ஏதேனும் ஒரு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுங்கள்." - என்றார்.