ரணிலின் வரவு - செலவுத் திட்டத்தை புறக்கணிக்க பல அரசியல் தரப்பினர் முடிவு
வரவு - செலவுத் திட்டத்தை புறக்கணிக்க முடிவு
2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவுத்திட்டத்திற்கான வாக்களிப்பில் இருந்து விலகியிருக்க பல அரசியல் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பை இன்று நாடாளுமன்றத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வு நேரலை
2022 இடைக்கால வரவு - செலவுத் திட்டத்திற்கு தானும் டலஸ் அழகப்பெருமவும் உட்பட 13 பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் வாக்களிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
கடந்த 2 நாட்களாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

