நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை குறைக்கவும்!! அமைச்சர் பணிப்புரை
Bandula Gunawardane
Transport Fares In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kanna
நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலைக் குறைப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, புதிய பேருந்து கட்டண விபரங்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
இதேவேளை, எரிபொருள் விலை குறைக்கப்பட்டதால் பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, எரிபொருள் விலை குறைப்பு - பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிப்பு!
