மக்களுக்கு பேரிடி : பேருந்துக் கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு
பேருந்துக் கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC) இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் (LPBOA) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாயில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சொகுசு பேருந்துகளுக்கான கட்டணம்
சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத் தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 20 சதவீதத்தினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை முதல் 100 கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிக பயணத் தூரத்திற்கு 15 சதவீதத்தினாலும் அதிரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் உரிய சதவீதம் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்