இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பேருந்து கட்டணங்கள்..!வெளியாகிய அறிவித்தல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
பேருந்து கட்டணம்
பேருந்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஒரு லீட்டர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டதன் பயனை பயணிகளான மக்களுக்கு வழங்குதற்காக பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிரேண்டா தெரிவித்துள்ளார்.
குறைக்கப்படும் பேருந்து கட்டணங்களின் விதம் தொடர்பில் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வடைந்ததன் பின்னனியில் சடுதியாக பேருந்து கட்டணங்கள் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
