அதிகரிக்கும் கொவிட் - பாரிய நெருக்கடியில் முக்கிய சேவை
covid
crisis
bus service
Gemunu Wijeratne
By Sumithiran
கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதனால் பேருந்து சேவை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்தார்.
பெருந்தொகையான பேருந்து ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக பெருமளவிலான பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விஜேரத்ன குறிப்பிட்டார்.
மேலும், பேருந்து ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பேருந்து ஊழியர்களும் பயணிகளும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பேருந்துகளில் பயணிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
