திருப்பங்கள் நிறைந்த தொழிலதிபரின் கொலை வழக்கு - வெவ்வேறு காரணங்களை கூறும் வைத்தியர்கள்
By Dharu
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் சயனைட் உட்கொண்டதால் உயிரிழந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புதுகடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கை முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக ஷாப்டர் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
இறுதி விசாரணை
ஒரே மருத்துவர் இரண்டு தடவைகள் மரணத்திற்கு இரண்டு காரணங்களை கூறியதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இறுதி விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 8 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி