ஆசிரியையின் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை புரிய முயன்ற வர்த்தகர் கைது
arrest
police
buisnessman
By Jaso
கிருலப்பனை பகுதியில் 19 வயது ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் ஒரு வர்த்தகரை பொலிசார் கைது செய்தனர்.
சந்தேக நபர் கிருலப்பனையில் உள்ள சித்தரத்த மாவத்தையில் வசிப்பவர். ஆசிரியையும் அதே வீதியில் வசிப்பவராவார்.
ஆசிரியை தனது தாய் மற்றும் சகோதரருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
ஜூலை 31 இரவு, சந்தேக நபர் ஆசிரியையின் வீட்டிற்குள் நுழைந்து அவரைத் தொட்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். ஆசிரியை சந்தேக நபரை நோக்கி தாக்கவும் அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
பின்னர் அந்த வீட்டில் இருந்து சந்தேக நபரின் மொபைல் போனை பொலிசார் கண்டுபிடித்தனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார், சிறுமி களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி