கட்டுநாயக்காவில் வந்திறங்கிய தொழிலதிபர் கைது
Bandaranaike International Airport
Colombo
Sri Lanka Customs
By Sumithiran
ரூ. 19 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை தான் அணிந்திருந்த ‘கோட்’டில் மறைத்து வைத்து, கொண்டு வந்த தொழிலதிபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (03) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு, மருதானை, சங்கராஜ மாவத்தையில் வசிக்கும் 48 வயதுடைய காலணி தொழிலதிபரே கைது செய்யப்பட்டவராவார்.
அணிந்திருந்த கோட்டால் சிக்கிய தொழிலதிபர்
இவர் கொண்டு வந்த காலணித் தொகுதியை சுங்க அதிகாரிகள் பரிசோதித்து கொண்டிருந்தபோது, அவர் அணிந்திருந்த கோட்டைக் கழற்றி ஒரு நாற்காலியில் வைத்தார்.
இது குறித்து சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரி, அனுமதி பணியை ஒதுக்கி வைத்துவிட்டு, தொழிலதிபர் கழற்றியிருந்த கோட்டை எடுத்து பரிசோதித்தபோது, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.847 கிலோ "குஷ்" போதைப்பொருளை பறிமுதல் செய்ய முடிந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
