கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வர்த்தகர்கள்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (01) குறித்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்கள் கொழும்பைச் சேர்ந்த 30 வயதுடையவரும் கேகாலையைச் சேர்ந்த 36 வயதுடையவரும் என தெரியவந்துள்ளது.
டுபாயிலிருந்து வருகை தந்தவர்கள்
சந்தேக நபர்களான வர்த்தகர்கள் இருவரும் டுபாயிலிருந்து நேற்று 06.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் வர்த்தகர்கள் இருவரும் விமான நிலையத்தின் (green channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயனற் போது சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, வர்த்தகர்கள் இருவரும் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 116,200 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 581 காட்டுன்களும் 117 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
