காவல்துறை மா அதிபராக மீண்டும் சி.டி.விக்ரமரட்ன
சிறி லங்காவின் காவல்துறை மா அதிபராக சி.டி.விக்ரமரட்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறி லங்கா காவல்துறை மா அதிபராக பணியாற்றிய சி.டி. விக்ரமரட்ன கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவருடைய சேவைக் காலம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கமைய 3 மாதத்தால் நீடிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை மா அதிபரின்றி,சிறி லங்கா காவல்துறை

இதனை தொடர்ந்து, கடந்த 23 ஆம் திகதியுடன் அவரது நீடிக்கப்பட்ட சேவைக்காலம் நிறைவடைந்திருந்த நிலையில், காவல்துறை மா அதிபரின்றி,சிறி லங்கா காவல்துறை செயல்படுவதாக பல அமைப்புக்களும் தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்துடன், மக்கள் நம்பிக்கையை வென்ற நேர்மையான ஒருவர் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டடிருந்தது.
மீண்டும் மூன்று மாதங்களுக்கு

இந்த பின்னணியில், சிறி லங்காவின் காவல்துறை மா அதிபராக சி.டி.விக்ரமரட்ன மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் அனுமதியுடன் சி.டி. விக்ரமரட்ன மேலும் மூன்று மாதங்களுக்கு காவல்துறை மா அதிபராக அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 2 மணி நேரம் முன்