குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல் : கிடைத்தது அமைச்சரவை அனுமதி

Sri Lanka Cabinet Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Sathangani Apr 22, 2025 08:37 AM GMT
Report

"உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை" வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (21-04-2025) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறுமையில் உள்ள அல்லது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டு வசதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய வறுமையை குறைப்பதற்கும் இந்த வீட்டு வசதித் திட்டம் நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்படுகிறது.

பிள்ளையானின் சூழ்ச்சியால் யாழில் தாயை பிரிந்து தவிக்கும் குழந்தைகள்

பிள்ளையானின் சூழ்ச்சியால் யாழில் தாயை பிரிந்து தவிக்கும் குழந்தைகள்

 குறைந்த வருமானம் 

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வறுமையில் உள்ள அல்லது குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, வீடு கட்டுவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு கட்டுமான முன்னேற்றத்தின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படுகிறது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல் : கிடைத்தது அமைச்சரவை அனுமதி | Cabinet Approve Increase In Housing Subsidy Amount

தெரிவு செய்யப்படும் பயனாளி, குறைந்தபட்சம் 550 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு ஒன்றை கட்ட வேண்டும். இதற்காக அரசு வழங்கும் 650,000 ரூபா மானியத் தொகைக்கு மேல், மீதமுள்ள செலவை பயனாளி ஏற்க வேண்டும்.

திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது ஒரு வீட்டின் மதிப்பீட்டு செலவு 1,147,000 ரூபாவாக இருந்தது. ஆனால், தற்போது இந்த செலவு 1,764,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

புதிய பாப்பரசர் பட்டியலில் கொழும்பு பேராயர் ..! தற்காலிக பொறுப்பாளராக அமெரிக்க கர்தினால்

புதிய பாப்பரசர் பட்டியலில் கொழும்பு பேராயர் ..! தற்காலிக பொறுப்பாளராக அமெரிக்க கர்தினால்

முன்வைத்த யோசனை

அரச மானியத் தொகைக்கு மேல் மீதமுள்ள செலவை ஏற்க தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பொருளாதார நிலைமைக்கு அமைய சாத்தியமில்லை என்பதால், தற்போது வழங்கப்படும் 650,000 ரூபா மானியத் தொகையை 1,000,000 ரூபாவாக உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல் : கிடைத்தது அமைச்சரவை அனுமதி | Cabinet Approve Increase In Housing Subsidy Amount

இந்த நிலையில் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டு வசதி அமைச்சர் (MOUDH) முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொய்யுரைக்கும் அரசு - ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்...! அநுரவிற்கு உச்சக்கட்ட அழுத்தம்

பொய்யுரைக்கும் அரசு - ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்...! அநுரவிற்கு உச்சக்கட்ட அழுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்