2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்
நிதி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொள்கை வகுத்தல் அமைச்சர் என்ற தகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இன்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாகும்.
நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, 2027ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 4,992 பில்லியன் ரூபாவாகும்.
856 பில்லியன் ஒதுக்கீடு
மிக அதிகபட்ச ஒதுக்கீடாக, ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக்கு 856 பில்லியன் ரூபாய் இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரவு செலவுத் திட்ட உரையின் போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடுத்த ஆண்டிற்கான வருமானக் கணிப்புகள், நிதிக் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் குறித்த விபரங்களை ஜனாதிபதி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |