நீங்கப்போகும் தட்டுப்பாடு : வரப்போகும் உப்பு கப்பல்
அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உப்புக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கள்ளச்சந்தையில் அதன் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.
இவ்வாறு உப்பு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பன அரசின் நிர்வாக திறமையின்மையின் வெளிப்பாடு என பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
அரசாங்கம் துரித நடவடிக்கை
இந்த நிலையில் உப்பு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வைகையில் அரசாங்கம் துரித நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன்படி இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேவையான உப்பு இறக்குமதி
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இதை தெரிவித்துள்ளது. இதனூடாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பு மற்றும் நுகர்வோருக்கு தேவையான அயடின் கலந்த உப்பு இறக்குமதிக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |