மின் கட்டண புதிய விலைச் சூத்திரம் - அமைச்சரவை அங்கீகாரம்
மின்சாரக் கட்டணங்களுக்கான செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவு
எவ்வாறாயினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
2023 ஜனவரி முதல் மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Cabinet approval granted to amend the general policy guidelines for the electricity industry and to implement a cost reflective electricity tariff to be implemented from Jan 2023.
— Kanchana Wijesekera (@kanchana_wij) January 9, 2023


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
