கோட்டாபய பதவிவிலக முன் அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும் - கட்சிசார்பற்ற போராட்டகாரர்கள் அமைப்பு கோரிக்கை
அமைச்சரவையை கலைக்க வேண்டும்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகும் முன்னர் அமைச்சரவையை கலைக்க வேண்டும் என கட்சிசார்பற்ற போராட்டகாரர்கள் அமைப்பின் பிரதிநிதியான மருத்துவர் திலங்க சமரசிங்க கூறியுள்ளார்.
அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர், புதிய அரச தலைவரையும் பிரதமரையும் தெரிவு செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கிடைக்கும் என திலங்க சமரசிங்க கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை எந்த வகையிலும் பதில் அரச தலைவராக பதவி வகிக்க விடக்கூடாது.
ரணில் அமைச்சு பதவியை வகிக்கலாம்
எனினும் ரணில் விக்ரமசிங்க புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவியை வகிப்பதை தமது அமைப்பு எதிர்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை அடுத்து அரச தலைவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
