ராஜபக்சக்களின் உச்சம் தலையில் சிங்கள மக்கள் கொடுத்த அடி! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாபம்

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Rajapaksa Family Sri Lanka Anti-Govt Protest
By Kanna Jul 10, 2022 11:41 AM GMT
Report

ராஜபக்ச குடும்பம், இலங்கை அரசியல் பாடத்தில் ஓர் தவிர்க்க முடியாத அத்தியாயம்..!

சிறிலங்காவின் அரசியலில் தமெக்கென ஓர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தனர் ராஜபக்சவினர். சிங்களவர்கள் எவ்வாறு துட்டகைமுனுவை இனக்காவலனாக பார்த்தார்களோ அவ்வாறே ராஜபக்ச குடும்பத்தையும் தமது காவலர்களாக பார்த்தனர்.

வீறுநடை போட்டு நடந்த ராஜபக்ச குடும்பம் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை கண்டது. 2015 மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து மைத்திரி ஆட்சியமைத்து கொண்டார். மைத்திரியின் காலத்தில் சர்வாதிகாரம், ஊழல், மோசமான ஆட்சி, குடும்ப உறுப்பினர்களுக்குச் சலுகை வழங்கல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ராஜபக்ச குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டன. ராஜபக்சாக்களின் அரசியல் வரலாறு முடிவடைந்து விட்டது என பலர் பரப்புரை செய்துகொண்டனர்.

ஆனால் இலங்கையை மீட்பதற்கும், காப்பதற்கும் தம்மைத் தவிர வேறு ஒருவர் இல்லை என்பதை சிங்கள மக்களிடையே ஆழப் பதியச் செய்து மீண்டும் மீண்டெழுந்தனர் ராஜபக்சவினர்.

69 லட்சம் விருப்பு வாக்கு, மூன்றில் இரண்டு பெரும்பாண்மை என 2019 ஆம் ஆண்டு ஆட்சியமைத்தார் கோட்டாபய ராஜபக்ச. இலங்கை வரலாற்றில் தனிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற ஒரேயொரு அரச தலைவர் என்ற சாதனையுடன் ஆட்சியமைத்தது கொண்டார் கோட்டாபய ராஜபக்ச.

அவரின் வெற்றி என்பது சிங்கள மக்களின் மீட்சியாக கொண்டாடப்பட்டது. போரை முடித்த ராஜபக்சக்களே நாட்டையும் பாதுகாப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் கண்முடித்தனமாக நம்பினர்.

அரச தலைவராக பொறுப்பேற்ற கோட்டாபயவின் செயற்பாடுகளும் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. அரச அலுவலகங்களுக்கு நேரில் சென்று சோதனை செய்வது ,கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்பது என ஆரம்பத்தில் மக்கள் நாயகனாக திகழ்ந்தார் கோட்டாபய.

இருப்பினும், இரண்டே ஆண்டுகளில் அத்தனையும் தவுடுபொடியானது. அவர் எடுத்த பொருளாதாரக் கொள்கை, எடுக்கப்பட்ட முடிவுகள், நிறைவேற்று அதிகாரமும் சொந்த மக்களாலேயே கோட்டாபயவின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு நிலைமையை மாறியது.

கோட்டாபய பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் இலங்கை மெல்லமெல்ல கடுமையான பொருளாதாரா நெருக்கடியை காண தொடங்கியது. பண வீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, விலை உயர்வுகள், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள், மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடுகள், எரிபொருளுக்கு வரிசைகள், எரிவாயுவுக்கு வரிசைகள் என அனைத்து விதத்திலும் இலங்கை வரலாறு காணாத ஓர் நெருக்கடியை எதிர்கொண்டது.

நெருக்கடிக்கு கொரோனா காரணம் என ராஜபக்சவினர் கூறினார் ஆனால் இலங்கையின் இவ்வாறான நிலைமைக்கு முழுக்க முழுக்க ராஜபக்ச குடும்பத்தினரே காரணம் என மக்கள் கோஷமிட தொடங்கினர்.

நெருக்கடியுடன் கண்விழித்த சிங்கள மக்கள் ராஜபக்சாக்களின் ஊழல்களை தாமாகவே வீதிகளுக்கு கொண்டுவந்தனர். வாக்களித்து கோட்டாபயவை அரச தலைவராக்கிய மக்களே வீதிக்கு இறங்கி "வீட்டுக்கு செல் கோட்டா" என போராட்டத் தொடங்கினர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சிக்கு வந்த அரச தலைவர் ஒருவருக்கு எதிராக பொதுமக்கள் வீதிக்கு இறங்கியது இதுவே முதல் தடவையாகும். இனக்காவலர்களாக ராஜபக்சவினரை வணங்கிய பெரும்பான்மை மக்களே ராஜபக்சவினரை வெளியேறுமாறு கோஷமிடத் தொடங்கினர்.

தமது எதிர்காலத்துக்காக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தது. கோட்டா கோ ஹோம் எனும் கோஷம் உரக்க ஒலிக்க தொடங்கியது . உக்கிரமடைந்த மக்களின் போராட்டங்களை தொடர்ந்து ராஜபக்ச குடும்பத்தின் சாம்ராஜ்ஜியம் மெதுவாக சரியத் தொடங்கியது. ராஜபக்சவினர் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தனர்.

தமது குடும்பத்துக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து இலங்கையின் அரசியலை நடத்தி வந்த ராஜபக்ச குடும்பம், மக்கள் புரட்சியினை பார்த்து விழி பிதுங்கி நின்றது. அவர்கள் இதனை தமது அரசியல் வாழ்க்கையில் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள் என்பது மாத்திரம் உண்மை.

மே ஒன்பதில் மகிந்தவுக்கு ஏற்பட்ட பரிதாபம்

ராஜபக்சக்களின் உச்சம் தலையில் சிங்கள மக்கள் கொடுத்த அடி! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாபம் | Gotabaya Resign Rajapaksha Family June 9 Protest

மக்கள் போராட்டம் உக்கிரம் பெற்ற நிலையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

நாட்டில் மோசமடையும் பொருளாதார நெருக்கடியில் பிரதமரால் எந்தவொரு தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என மக்கள் பிரதமரை பதவியில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினர். அலரி மாளிகையின் முன் மைனா கோ கம எனும் போராட்டக் களத்தை அமைத்து மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போராட ஆரம்பித்தனர்.

மக்கள் போராட்டம் வலுப்பெற்ற நிலையில் கடந்த மே 9 முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதை அறிவிப்பதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அவரை வழியனுப்பி வைப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர். அலரி மாளிகைக்கு வந்த ஆளும் தரப்பு ஆதரவாளர்களுக்கு அரசுக்கு எதிராக போராடியவர்களை தாக்குமாறு ஏவிவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் கொள்ளுப்பிட்டி மைனா கோ கம மற்றும் காலி முகத்திடல் கோட்டா கோ கம நோக்கி தாக்குதல் நடாத்த புறப்பட்டனர். காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என காவல்துறைமா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குண்டர்களின் மிலேச்சத்தனமான தாக்குதல் அரசுக்கு எதிராக போராடிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பாராபட்சம் இன்றி அனைவரின் மீதும் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டது.

கலவர பூமியாக மாறியது தலைநகர். அரச எதிர் போராட்டக்காரர்களும் மகிந்தவின் ஆதரவாளர்களை தேடிப்பிடித்து தாக்க ஆரம்பித்தனர். அவசர அவசரமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இருப்பினும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

கலவரம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்தார். மகிந்தவின் பதவி விலகல் என்பது இலங்கை அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். மக்களின் கிளர்ச்சியின் உச்சம் மகிந்த ராஜபக்சவை பதவி விலக வைத்து சொந்த நாட்டிலேயே ஒளிந்து இருக்கச் செய்தது.

மகிந்த ராஜபக்சவின் விலகலை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார்.

ஜூன் ஒன்பதில் பசிலுக்கு ஏற்பட்ட பரிதாபம்

ராஜபக்சக்களின் உச்சம் தலையில் சிங்கள மக்கள் கொடுத்த அடி! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாபம் | Gotabaya Resign Rajapaksha Family June 9 Protest

இது ஒருபுறமிருக்க பசில் ராஜபக்ச ஜூன் 9 ஆம் திகதி தனது நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகினார்.

கோட்டாபயவின் ஆட்சியில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்த பசில் ராஜபக்ச நாட்டின் நிதியமைச்சராக கோட்டாபயவால் நியமிக்கப்பட்டார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பொருளாதார கொள்கையை சரியாமல் வகுக்காமலும், சரியான முடிவுகளை எடுக்காமலும், பேச்சவார்த்தைகளை ஒழுங்காக நடத்தாமலும் அசண்டையீனமாக இருந்ததால் தான் நாடு மேலும் நெருக்கடி சந்தித்தது எனும் எண்ணம் மக்கள் மத்தியில் ஆழப்பதிந்தது.

பசிலால் வீழ்ந்து கிடந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியவில்லை. நிதியமைச்சர் பதவியில் பசிலை விலகுமாறு மக்களும் வலியுறுத்தினார் கட்சிக்குள்ளும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பசில் ராஜபக்ச தனது நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகிய பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற பதவியில் தொடர்ந்தும் செயற்பட்டார். இருப்பினும், கடந்த ஜூன் 9 ஆம் திகதி பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற பதவியிலிருந்தும் விலகினார்.

தனது பதவி விலகலுக்கு 21 சீர்திருத்தமும் ஓர் காரணம் என பசில் ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் கலந்து கொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் உருவாக்கப்பட்ட 21 ஆம் திருத்தத்தின்படி இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்ற பதிவியில் வகிக்க முடியாது. பசிலின் பதவி விலகளுக்கு முன்னைய நாட்களில் 21 ஆம் திருத்தத்தை நிறைவேற்றும் முனைப்போடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டிருந்தார். திருத்தம் தொடர்பில் ரணிலுக்கும் பசிலுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், 21 ஆம் அரசியலமைப்பு சீர் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் தனது நாடாளுமன்ற பதவி பறிபோகிவிடும் என்ற அவமானத்தில் பசில் ராஜபக்ச முன்னதாவே பதவி விலகியுள்ளார் என அரசியல் அவதானிகள் பலர் சுட்டிக்காட்டி வந்தனர்.

பசிலின் விலகளுக்கு பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் பின்னி பிணைக்கப்பட்ட ஆட்சியில் கோட்டாபய மாத்திரம் தனித்து நின்றார்.

ஜுலை ஒன்பதில் கோட்டாக்கு ஏற்பட்ட பரிதாபம்

ராஜபக்சக்களின் உச்சம் தலையில் சிங்கள மக்கள் கொடுத்த அடி! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாபம் | Gotabaya Resign Rajapaksha Family June 9 Protest

சிறிலங்கா அரசியல் வரலாற்றில் கோட்டாபய ராஜபக்ச சாதனை படைத்த நபராக உருவெடுத்திருந்தார். குறிப்பாக, அறுதிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று அரசதலைவராக தெரிவு செய்யப்பட்ட ஒருவராக அவர் மாறியிருந்தார்.

அதுமாத்திரமன்றி, அரசியல் அனுபவமற்ற ஒருவரை போரில் சிறப்பாக செயல்பட்டார் என்ற எண்ணப்பாட்டோடும், சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை அவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கையாலும், கோட்டாபயவை சிங்கள மக்கள் அதிகம் நம்பினார்கள்.

ஆனால், நிஜத்தில் நடந்தது வேறு, கோட்டாபயவின் ஆட்சியில் வெளிநாட்டுக்கொள்கைகள் பிழைத்தன. பொருளாதாரக் கொள்கைகள் சீர் குலைந்தன. உள்நாட்டு வளங்கள் வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கப்பட்டன. பொது மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்ந்தது. வரிசை யுகத்திற்குள் மக்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். வெளிநாடுகளுக்கு நாட்டின் ஒவ்வொரு பகுதிகளும் விற்கப்பட்டன.

அதுமாத்திரமன்றி, ஊழல் நிரைந்த அமைச்சரவை ஒன்று தோற்றம் பெற்றது. பல முறை அமைச்சரவையை மாற்றியும் கோட்டாபயவால் சிறந்த நிர்வாகத்தை கட்டமைத்து, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியவில்லை.

நாளுக்கு நாள் பொது மக்களின் வாழ்க்கை அதளபாதாளத்திற்குள் சென்றது. கடன் சுமைகளாலும், வேலை வாய்ப்புக்களை இழந்ததாலும், எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு என்று எதையும் பெற்றுக் கொள்ள முடியா நிலையில், கிடுகிடுவென பொருட்களின் விலைகள் அசுர வேகத்தில் உச்சத்தை தொட, கோட்டாபயவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்தனர்.

எனினும், தான் தோல்வியுற்ற தலைவராக பதவி விலகமாட்டேன் என்று அடம்பிடித்தார் கோட்டாபய. ஆனாலும் ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களே அவரை விரட்டியும் அடித்தனர்.

மே ஒன்பதாம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை துறந்தார். அதுவே ராஜபக்சக்களில் முதல் தூண் சரிந்தது. பின்னர் ஜுலை ஒன்பதாம் திகதி பசில் ராஜபக்ச என்னும் ஏழு மூளைக்காரர் பதவியை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அடுத்து ஜுலை ஒன்பதாம் திகதி, வெறுப்பின், விரக்தியின், கோபத்தின் உச்சத்தில் இருந்த மக்களால் விரட்டப்பட்டிருக்கிறார் கோட்டாபய.

ராஜபக்சக்களின் உச்சம் தலையில் சிங்கள மக்கள் கொடுத்த அடி! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாபம் | Gotabaya Resign Rajapaksha Family June 9 Protest

ஆட்சியில் அமர்த்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள், வாழ்க்கை சுபீட்சத்தின் நோக்கை நோக்கி நகரும் என்ற மக்களின் ஆசையை சிதைத்த கோட்டாபயவை அதே மக்கள் விரட்டியடித்திருக்கிறார்கள்.

இவ்வாறான ஓர் அடியை சிங்கள மக்களிடமிருந்து ராஜபக்சக்கள் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள் என்பது மாத்திரம் நிதர்சனமான உண்மை...!




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Atchuvely, வவுனியா, Montreal, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Montreuil, France

27 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, Markham, Canada

03 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருச்சி, India

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Paris, France, Luton, United Kingdom

30 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்

இளவாலை, புத்தளம்

02 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுவில்

03 May, 2013
14ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024