அதிகரிக்கும் பதற்றம் : லெபனானில் இருந்து உடன் வெளியேற உத்தரவு
இஸ்ரேலுக்கும்(israel) ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் லெபனானில்(lebonan) உள்ள தமது பிரஜைகளை உடன் வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.
உச்சக்கட்ட பதற்றம்
இந்த தாக்குதலை அடுத்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோன்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவும் இதே கோரிக்கையை தங்கள் நாட்டு மக்களிடம் விடுத்துள்ளன.
லெபனானில் 15,000 அவுஸ்திரேலியர்கள்
இதேவேளை சுமார் 15,000 அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 500,000 பேர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |