பிரசார நடவடிக்கைளில் வன்முறை : தேர்தல் அவதானிகள் சொல்வது என்ன..!
பொதுத் தேர்தலுக்கு முன்னதான பிரசார நடவடிக்கைகள் பொதுவாக மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக தேர்தல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்தல் தொடர்பான பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என பவ்ரல் ( Pafferal) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி(Rohana Hettiarachchi) தெரிவித்தார்.
இதுவரை இருநூறுக்கும் குறைவான சிறு புகார்களே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அமைதியான முறையில் தேர்தல் பிரசாரம்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க(Manjula Gajanayake), ஒட்டுமொத்தமாக தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றன. இது பாராட்டப்பட வேண்டிய நிலை என்றார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க(Ananda Ratnayake), தேர்தலின் அமைதியான சூழலை தொடர்ந்தும் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும்.
இந்த முன்மாதிரியான சூழ்நிலைக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |