யாழில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு
                                    
                    Jaffna
                
                                                
                    Selvarajah Kajendren
                
                                                
                    Sri Lanka Presidential Election 2024
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்(Jaffna) கொக்குவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கூறினர்.
ஜனாதிபதி தேர்தல்
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்(Jaffna) திருநெல்வேலி பகுதியில் கடந்த இன்று 8 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 













                                        
                                                                                                                        
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
            மரண அறிவித்தல்