உக்ரைனுக்கு 500 மில்லியன் டொலர் இராணுவ உதவி அறிவித்துள்ள கனடா
இந்த ஆண்டு உக்ரைனுக்கு கூடுதலாக 500 மில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்க கனடா(Canada) திட்டமிட்டுள்ளது.
நேட்டோ உச்சி மாநாட்டின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்போது, நேட்டோ நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உறுதிமொழிகளையும், உறுதியையும் அளித்தது.
500 மில்லியன் உதவி
வோஷிங்டன் உச்சிமாநாட்டில் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் உக்ரேனிய(Ukraine) அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும்(Volodymyr Zelenskyy) இடையிலான இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து கனடா ஏற்கனவே உறுதியளித்த மற்றும் நன்கொடையாக வழங்கிய 4 பில்லியன் டொலர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு மேல் கூடுதல் பணம் கிடைத்துள்ளது.
மேலும், மேற்கத்திய போர் விமானங்களை ஓட்ட கற்றுக் கொள்ளும் உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சியை விரிவுபடுத்துவதாகவும் கனடா தெரிவித்துள்ளது.
கனடா திட்டம்
நேட்டோ உச்சி மாநாட்டில் நீர்மூழ்கிக் கப்பல்களை மாற்றும் திட்டத்தை கனடா உறுதிப்படுத்துகிறது.
பின்னர் இதுகுறித்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ட்ரூடோ, ''நேட்டோவில் ஜெலென்ஸ்கியுடன் நான் பகிர்ந்துகொண்ட பதிவில், உக்ரைனின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், ரஷ்யாவிற்கு எதிராக தங்கள் வானத்தை பாதுகாக்கவும், உக்ரேனிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவும், 500 மில்லியன் இராணுவ ஆதரவுடன் வலுப்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.
News I shared with @ZelenskyyUA in our talks at @NATO: Canada plans to reinforce Ukraine’s defence with $500 million more in military support — and train more Ukrainian fighter pilots to defend their skies against Russia. pic.twitter.com/Efl4X1rCyE
— Justin Trudeau (@JustinTrudeau) July 11, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |