உலகை உலுக்கிய கொடூரம்..!! கனடா எடுத்த அதிரடி முடிவு
கைத்துப்பாக்கி உரிமை முடக்கம்
கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அமெரிக்க பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு எதிரொலியாக, கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை முடக்கம் செய்ய உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பாடசாலை ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா்.
உவால்டே நகரில் ரோப் என்ற பாடசாலையில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சட்டமாகிவிட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது என கூறப்படுகிறது.