புதிய வரி நடைமுறையினால் கனடாவில் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
Canada
World
By Laksi
கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூலதன ஆதாய வரி திட்டத்தினால் மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திலே குறித்த மூலதன ஆதாய வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய வரி நடைமுறையினால் தங்களது ஓய்வூதிய சேமிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சில குடும்ப மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலதன ஆதாய வரி அறிமுகம்
அத்துடன் குடும்ப மருத்துவர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் காப்புறுதி கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்
இந்த வரித் திட்டத்தினால் தங்களது சேமிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என குடும்ப மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்