வெளியான மகிழ்ச்சி தகவல் : கனடாவில் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம்
கனடாவில் (Canada) குறைந்தபட்ச ஊதியம், 17.75 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை கனடாவின் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் இம்முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது உள்ள 17.40 டொலர்களாக செலுத்தும் குறைந்தபட்ச ஊதியத்தை விட 2.4% அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணியாளர்களின் சம்பளம்
மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவுடன் ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பகுதி நேரம், தற்காலிக வேலைகள் மற்றும் குறைந்த ஊதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு இது நன்மை பயக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
அரசின் விதிமுறையின்படி, எந்த மாகாணத்திலும் அல்லது பிரதேசத்திலும் உள்ள குறைந்தபட்ச ஊதியம் மத்திய அரசாங்கத்தின் ஊதியத்தை விட அதிகமாக இருந்தால், தொழிலதிபர்கள் அதிக தொகையை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பிடத்தக்கது.
[3TIXYUC ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
