உக்ரைன் மக்களுக்கு அடைக்கலம் அளித்தது கனடா
people
canada
ukraine
asylum
By Sumithiran
உக்ரைனிலிருந்து போர் காரணமாக அகதிகளாக வெளியேறும் மக்கள் கனடாவில் தங்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் குண்டு வீச்சு தாக்குதலால் பல இடங்களில் பதுங்கியிருந்த பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பல மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள் தங்கி கொள்ள கனடா அனுமதி அளித்துள்ளது. 3 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கி கொள்ளலாம் என கூறியுள்ள கனடா அரசு இதற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி