ரஷ்யாவுக்கு கனடாவின் பேரிடியான அறிவிப்பு! விதிக்கப்பட்ட தடைகள்
ஒன்டாரியோவில் நடைபெற்ற ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, ரஷ்யாவுக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்துள்ளார்.
அதன்படி, ரஷ்யாவின் ட்ரோன் உற்பத்தி மற்றும் எரிசக்தி துறை மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது.
இத்தடைகள், உக்ரைனுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள் மற்றும் கலப்பின யுத்த உத்திகள் நடத்தப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு அமைப்புகளை குறிவைத்து உள்ளன.
ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கை
மேலும், சர்வதேச தடைகளை மீறி எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ரஷ்யாவின் “நிழல் கடற்படை” கப்பல்கள் கூட இந்தத் தடைகளின் வரம்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Credit: Macleans.ca
இதுகுறித்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்ததாவது: “ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தண்டனையின்றி நீடிக்க அனுமதிக்க மாட்டோம்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் கலப்பின உத்திகளை நிறுத்துவதற்காக, அதன் ஐடி மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |