கனடாவில் இருந்து குச்சவெளி முபாரக்கை சிக்க வைத்த மறைகரம்! மனைவியுடன் சேர்ந்து வைத்த பொறி
அண்மையில் திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது பிரத்தியேக சாரதி ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதன்போது, அவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாரியப்பன் என்ற நபருக்கு காணி அனுமதிப்பத்திரம் ஒன்றரை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அய்னியப்பிள்ளை முபாரக் இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டார்.
முன்னதாகவே குச்சவெளி பிரதேச சபை தலைவராக அய்னியப்பிள்ளை முபாரக் தெரிவு செய்யப்படுவதற்கு, இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற வேட்பாளர்கள் மூவர் அவரின் ஊழல்களை முன்வைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும், தெரிவின் போது அய்னியப்பிள்ளை முபாரக்கிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் சுமந்திரனால் கட்சி உறுப்பினர்களை கடுந்தொனியில் எச்சரிக்கும் வகையிலான கடிதம் ஒன்று வெளியிடப்பட்டிருந்து.
இவ்வாறானதொரு பின்னணியில், அய்னியப்பிள்ளை முபாரக்கின் ஊழல்களை வெளிகொணரவும் அவரை சிக்க வைக்கவும் தற்போது கனடாவில் வசிக்கும் மாரியப்பன் மற்றும் இலங்கையில் இருக்கும் அவரின் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தை விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |