கடுமையான பதிலடி உறுதி : ட்ரம்ப்புக்கு கனேடிய அமைச்சர் கடும் எச்சரிக்கை
கனடாவுக்கு(canada) எதிரான எந்தவொரு வர்த்தகப் போருக்கும் கடுமையான பதிலடி உறுதி என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி(Mélanie Joly) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்(donald trump), கனேடிய பொருட்கள் மீதான சுங்க வரிகளை அதிகரிக்கப்போவதாக தெரிவித்த நிலையிலேயே கனேடிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய வர்த்தகப் போர்
தனது பொருளாதார மற்றும் வெளிவிவகாரக் கொள்கைத் திட்டங்களின் ஒரு பகுதியாக, கனேடிய இறக்குமதிகள் மீது 25 சதவீத வரிகளை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். மட்டுமன்றி, மெக்சிகோ, சீனா மற்றும் பிற வர்த்தக கூட்டாளிகளையும் அவரது புதிய கொள்கை குறிவைத்துள்ளது.
ட்ரம்பின் இந்த செயற்பாடு பல தசாப்தங்களில் இல்லாதவகையில் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மிகப்பெரிய வர்த்தகப் போராக இருக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
அதிகபட்ச பதிலடியை அளிக்கத் தயார்
அமெரிக்கர்கள் கனடாவிற்கு எதிராக ஒரு வர்த்தகப் போரைத் தொடங்க உள்ளனர். நாம் அதிகபட்ச பதிலடியை அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று வோஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
மேலும், ட்ரம்ப் தனது அச்சுறுத்தலை நிறைவேற்றினால், கனடா நுகர்வோர் மற்றும் வேலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தயாரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |