கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!
உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவரும் கனடா அரசு தற்போது பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ளது.
விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் விசா ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகள் மூலம் சர்வதேச விண்ணப்பதாரர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் தேவையுடையோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கனடா திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் தகுதிகள்
இந்த வேலைவாய்ப்புக்கு, 22 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்ட தொழில்முறை அனுபவம் அல்லது கல்வித் தகுதி அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பராமரிப்பாளர் வேலைவாய்ப்புக்கு 1 மணிநேரத்திற்கு 18 கனேடிய டொலர்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி, பராமரிப்பாளர் பொறுப்புகளாக தனிப்பட்ட பராமரிப்பு, மருந்து வழங்குதல், நடமாட்ட உதவி மற்றும் சிறிய வீட்டு வேலைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
விசா ஸ்பான்சர்ஷிப் வாய்ப்பு
மேலும், விசா ஸ்பான்சர் வேலைகளை கண்டறிவதற்கு விசா ஸ்பான்சர்ஷிப் வேலைகளைப் பட்டியலிடும் இணையதளங்களை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், விண்ணப்பதாரர்கள் தங்களின் திறமைகளை விளக்கி, சுயவிவரத்துடன் (resume) இணைந்து அனுப்ப வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் கனடா அரசு எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) அமைப்பின் கீழ் பிரஞ்சு மொழி திறனை கொண்ட வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அழைப்புகளை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |