மோசமடையும் இந்திய கனடா உறவு! கடும் தொனியில் சாடிய பிரதமர் ட்ரூடோ
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மீண்டும் மோசமாகி வருகிறது.
கனடாவில் (Canada) இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக்கொள்வதாக இந்தியா திங்களன்று கூறியது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் தனது அரசு ஆறு இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசு மிகப்பெரிய தவறு
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் இந்திய அரசு போதுமான ஒத்துழைப்பை அளிக்காததே இதற்கு காரணம் என பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையில் இணையுமாறும், திசை திருப்பும் அறிக்கைகளை நிறுத்துமாறும் ட்ரூடோ கடுமையான தொனியில் இந்தியாவை கேட்டுக்கொண்டார்.
கனேடிய மண்ணில் கனேடியர்களுக்கு எதிரான கொலை, வன்முறை சம்பவங்கள் என பல்வேறு குற்றச்செயலைகளை ஆதரித்து இந்திய அரசு மிகப்பெரிய தவறை செய்துவிட்டது.
இந்த குற்றங்களுக்கு இந்திய அரசு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்திய வெளியுறவு அதிகாரிகளை எங்கள் நாட்டின் தூதர்கள் 6 பேரும் நேரில் சந்தித்து வழங்கினர்.
ஆனாலும், இந்திய அரசு இந்த விவகாரத்தில் ஒத்துழைக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |