கனடா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றம்

Canada Student Visa World
By Sathangani Feb 08, 2026 09:46 AM GMT
Report

கனடா அரசாங்கம், சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி (Study Permit) விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர் அனுமதி எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளை, விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கனடாவுக்குள் நுழையும் மாணவர்கள்

அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுடன் இணைந்த கூட்டுப் பாடநெறிகளில் சேரும் மாணவர்கள், இனி ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தனித்தனியாக அத்தாட்சி கடிதம்  பெற வேண்டியதில்லை. ஒரே ஒரு மாகாண அத்தாட்சி கடிதம் போதுமானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றம் | Canada Updates Study Permit Rules Global Students

மேலும், பொது நிறுவனங்களில் முதுகலை (Master’s) மற்றும் முனைவர் (Doctoral) படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அத்தாட்சி கடிதம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள தொழிற்கல்வி பாடநெறிகளுக்கு சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், CEGEP கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அத்தாட்சி கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், விண்ணப்ப நடைமுறைகள் எளிதாக்கப்பட்டாலும், கனடாவுக்குள் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் பெருமளவில் குறைத்துள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்

கனடாவில் வீட்டு வசதி தட்டுப்பாடு

2026 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர் அனுமதி இலக்கு 155,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்த இலக்கு 305,900 ஆக இருந்த நிலையில், தற்போது அது அரைவாசியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கனடா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றம் | Canada Updates Study Permit Rules Global Students

கனடாவில் நிலவும் வீட்டு வசதி தட்டுப்பாடு மற்றும் சமூக சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதே இந்த முடிவின் பிரதான நோக்கமாகும்.

வருகை மாணவர்கள் மற்றும் பட்டதாரி பார்வையாளர்கள் வழக்கம் போல அத்தாட்சி கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் சில மாணவர்களுக்கு வசதியாக அமைந்தாலும், ஒட்டுமொத்த மாணவர் அனுமதி எண்ணிக்கையை அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரினவாத இனத்திற்கான கிவுல் ஓயா திட்டம்! ரிஷார்ட் எம்பி ஆதங்கம்

பேரினவாத இனத்திற்கான கிவுல் ஓயா திட்டம்! ரிஷார்ட் எம்பி ஆதங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019