கனடாவில் பணி அனுமதி - நேற்று முதல் நடைமுறையாகியுள்ள புதிய திட்டம்
கனடாவில் வேலை செய்யும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கூடுதலாக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி ஒன்றை கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser தெரிவித்துள்ளார்.
அதாவது கனடாவில் தற்காலிகப் பணியாளர் அனுமதி பெற்று வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் குடும்பத்தினரும், சில தற்காலிக நிபந்தனைகளின்பேரில் பணி அனுமதி பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள்.
புதிய விதிகளின்படி, training, education, experience and responsibilities (TEER) என்னும் தகுதிபெற்ற பணியாளரின் கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் பணி அனுமதி வழங்கப்படும்.
பிள்ளைகள், 16 வயதும் அதற்கு மேற்பட்டவர்களாகவும் இருப்பது அவசியம்.
ஜனவரி 30 முதல் நடைமுறை
இந்த புதிய விதிகள், நேற்று, அதாவது, ஜனவரி 30 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
கனடாவில் பல்வேறு துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் பணி அனுமதி வழங்க அரசு முடிவிடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
