கனடாவைச் சேர்ந்த டிக்டாக் பெண் பிரபலம் திடீர் மரணம் - துயரத்தில் ரசிகர்கள்
கனடாவைச் சேர்ந்த பிரபல டிக்டாக் பிரபலமான 21 வயதே ஆன மேஹா தாகூர் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்த நிலையில் அவரை பின்தொடரும் ரசிகர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடா வாழ் டிக்டாக் பிரபலம் மேஹா தாகூர் (வயது 21) தனது 2வது வயதில் கனடாவில் குடியேறினார்.
பின்தொடரும் 20 இலட்சம் ரசிகர்கள்

இதனிடையே மேஹா தாகூர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு காணொளிகளை வெளியிட்டு பிரபலமானார். டிக்டாக்கில் மேஹாவை சுமார் 9 இலட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் இன்ஸ்டாகிராமில் அவரை 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் மேஹா நவம்பர் 24ம் திகதி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படாத நிலையில் மாரடைப்பு அல்லது கார் விபத்தில் மேஹா தாகூர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        