பௌத்தத்தில் கை வைக்கும் NPP அரசு: முடிவு கட்டுவோம் - கொக்கரிக்கும் சரத் வீரசேகர
இலங்கையின் பௌத்த சாசனம் மீது விமர்சனக்கணை தொடுக்கும் அநுர அரசை விரட்டியடிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டும்
அவர் மேலும் கூறுகையில் “எனது நாட்டில் சாசனம் மற்றும் வளங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டும்.

ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஒரே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது நாமல் ராஜபக்ச தான்.
தமக்குரிய வாக்கு குறையும் என தெரிந்தும் அவர் அந்த அறிவிப்பை விடுத்தார்.
அப்படியான ஒருவர் ஜனாதிபதியானால் தான் இந்த நாட்டையும் பௌத்த சாசனத்தையும் பாதுகாக்க முடியும். அத்துடன் பௌத்த பிக்குகளுக்குரிய கௌரவமும் மீளக் கிடைக்கப்பெறும்." - என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்